வேப்பூர்:வேப்பூர் தாலுகா உருவாகி 6 ஆண்டுகளாகியும், கருவூலம் இல்லாததால் அரசு ஊழியர்கள், பயனாளிகள் அவதியடைகின்றனர்.
கடந்த 2013ல் விருத்தாசலம் தாலுகாவில் 21 வருவாய் கிராமங்களையும், திட்டக்குடி தாலுகாவில் 32 வருவாய் கிராமங்களையும் பிரித்து வேப்பூர் தாலுகா அறிவிக்கப்பட்டது. தற்போது, பஸ் நிலையம் அருகே 1. 33 கோடி மதிப்பிலான கட்டடத்தில் தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. இந்நிலையில், வேப்பூரை தாலுகா உருவாகி ஆறு ஆண்டுகளாகியும் இதுவரை அரசு கருவூலம் அமைக்கபடவில்லை.இதனால், தாலுகாவிற்குட்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியர்கள் பென்ஷன், வருவாய் கிராமங்கள் அரசுக்கு செலுத்த வேண்டியத் தொகை, நில அளவைக்கு பணம் செலுத்துதல், திட்டப் பயனாளிகள், பள்ளி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.சிறுபாக்கம் மற்றும் வேப்பூர் பிர்காவினர் விருத்தாசலம் கருவூலத்திற்கு சென்று, அரசுக்கு பணம் செலுத்தும் நிலை உள்ளது. இதனால், வீண் அலைச்சல், கால விரயம், கூடுதல் செலவினம் ஏற்படுவதுடன், வேப்பூர் தாலுகாவாக உருவாகியும் பயனின்றி உள்ளதாக, அரசு ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.எனவே, வேப்பூரில் கருவூலம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE