நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் கடலூர் வடக்கு மாவட்ட த.மு.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.தலைவர் ஷேக்தாவூத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், ம.ம.க., மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, பொருளாளர் அசன்முகமது, துணைதலைவர் மதார்ஸா, துணை செயலாளர்கள் அப்துல் ரஷீம், சம்சுதீன், சாகுல்அமீது இலக்கிய அணி செயலாளர் இக்பால், மருத்துவ அணி அமீர், நகர செயலாளர் அலிஉசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.டிசம்பர் 6ம் தேதி, கடலூரில் உரிமை மீட்பு போராட்டம் நடத்துவது, பாபர் மசூதி வழக்கில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.