சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலை சீரமைப்பில் அலட்சியம் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அவலம்

Added : டிச 04, 2019
Advertisement
 நெடுஞ்சாலை சீரமைப்பில் அலட்சியம் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அவலம்

தொடுகாடு:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை சீரமைப்பில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் வாகனங்கள் விபத்தில் சிக்குவதாக, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர் வழியாக, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், தினமும், அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என, 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலை, ஓராண்டுக்கு முன் சீரமைக்கப்பட்டது. இந்த நெடுஞ் சாலையில், மேல்நல்லாத்துார் முதல், தொடுகாடு வரை உள்ள சாலை, மிகவும் சேதமடைந்துள்ளது.

மேலும், சாலையின் இருபுறங்களிலும், மணல் அரிப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே மெகா பள்ளங்கள் உளளன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.இரவு நேரங்களில், கனரக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. நெடுஞ்சாலையோரம் உள்ள மெகா பள்ளங்களை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர் சாலையோர பள்ளங்களில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், தனியார் தொழிற்சாலைக்கு பொருட்கள் ஏற்றி வந்த கன்டெய்னர், சாலையோரம் உள்ள பள்ளத்தால், விபத்தில் சிக்கியது.மேலும், இதுகுறித்து நெடுஞ்சாலை துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மேல்நல்லாத்துார் முதல், ஸ்ரீபெரும்புதுார் வரை செல்லும் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் தான் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.எனவே, நெடுஞ்சாலையோரம் உள்ள பள்ளங்களை மணல் கொண்டு சீரமைத்து, வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X