பொது செய்தி

தமிழ்நாடு

உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

Added : டிச 04, 2019
Advertisement
 உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

திட்டக்குடி:உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், சமூக பங்களிப்பின் மூலம், எச்.ஐ.வி., தடுப்புப்பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல் குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வேந்திரன் தலைமையில், டாக்டர்கள் ரவி, சரண்யா, ஆனந்த், பாலாஜி, திருமாறன், சித்த மருத்துவர் பெரியசாமி, நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி, மருந்தாளுனர்கள் தண்டாயுதபாணி, சங்கரன், முருகானந்தம், செவிலியர்கள் கவிதா, குப்பு, சங்கீதா, செல்வி, மகேஸ்வரி, ஆய்வக நிபுணர்கள் வேல்முருகன், ஜான்சி, ஆய்வக நுட்பர் குமார், ஏ.ஆர்.டி.செவிலியர் தபிதாஞானம் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.விருத்தாசலம்விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், எய்ட்ஸ் தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில், நம்பிக்கை மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை மருத்துவர் எழில் தலைமை தாங்கினார். டாக்டர்கள் மூவேந்தன், கோவிந்தமுருகன், நம்பிக்கை மைய ஆலோசகர் பிரகாஷ், ஏ.ஆர்.டி., மைய அலுவலர் பாண்டியன், மூத்த செவிலியர்கள் சாந்தி, மல்லிகா, விஜயகம்சலா உட்பட பலர் பங்கேற்றனர். எய்ட்ஸ் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X