பொது செய்தி

தமிழ்நாடு

பிராமணர் சங்க கூட்டம்

Added : டிச 04, 2019
Advertisement
 பிராமணர் சங்க கூட்டம்

சிதம்பரம்:சிதம்பரத்தில் நடந்த தமிழ்நாடு பிராமணர் சங்க கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சிதம்பரம் கிளை சங்கம் சார்பில் 2020-25ம் ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம், புதுத்தெரு வேதபாராயண மடத்தில் நடந்தது. சங்க தலைவர் பாலகிருஷ்ண அய்யர் தலைமை தாங்கினார். நிர்வாகி கணேச சங்கரமூர்த்தி வரவேற்றார். ஸ்ரீமுஷ்ணம் ரவிசுந்தர் குருக்கள், சந்திரசேகரன், ராகவன், ரமணி சாஸ்திரிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் 2020-25ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. ரவிசுந்தர் குருக்கள் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்பட்டது. புதிய நிர்வாகிகளாக தலைவர் பாலகிருஷ்ண அய்யர், உப தலைவர்களாக ராகவன், கணேசன், செல்வரத்தின தீட்சிதர், பொதுசெயலாளர் பேராசிரியர் சந்திரசேகர், செயலாளர் கணேச சங்கரமூர்த்தி, பொருளாளர் ரமணி சாஸ்திரிகள், உப செயலாளர்கள் பிரபாகரராவ், விஜயேந்திரன், இளைஞர் அணி செயலாளராக ராகவேந்திரன் தேர்தெடுக்கப்பட்டனர்.மகளிர் அணி செயலாளராக கற்பகம், மகளிர் அணி உப செயலாளராக ஹேமா கிருஷ்ணமூர்த்தி, ஆலோசகராக பரிஷத் ஆகியோர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X