பேரம்பாக்கம்:பேரம்பாக்கம் ஊராட்சியில், மசூதி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஜாமியா மசூதி. இங்கு ஜாமியா மஸ்ஜித், யுனைடெட் வெல்பெர் ஆர்கனைசேஷன் மற்றும் நியூ ஹோப் மருத்துவமனை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். காலை, 9:00 மணிக்கு துவங்கிய மருத்துவ முகாம் மதியம், 1:00 மணிக்கு நிறைவடைந்தது. முகாமில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.