பொது செய்தி

தமிழ்நாடு

மாரி ஓடை ஆக்கிரமிப்பால் சம்பா பயிர் அழுகும் அபாயம்

Added : டிச 04, 2019
Advertisement

மங்கலம்பேட்டை:சின்னவடவாடி மாரி ஓடை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளதால், சம்பா பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி ஏரிக்கு, மழைக்காலங்களில் கோ. பவழங்குடி, மாத்தூர், கச்சிராயநத்தம், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்வேறு ஓடைகள் வழியாக மழைநீர் வரும். ஏரி முழு கொள்ளளவை எட்டியதும், ஏரியில் உள்ள மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறி, மாரி ஓடை வழியாக மணிமுக்தா ஆற்றில் கலக்கிறது.இந்த மாரி ஓடை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளதால், உபரி நீர் செல்ல வழியில்லாமல், சாகுபடி நிலங்களை மூழ்கடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட, அப்பகுதி மக்கள், பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், தற்போது பெய்த மழையால், சின்னவடவாடி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் மாரி ஓடை அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள, 30 ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.விருத்தாசலம் வேளாண் உதவி அலுவலர் சதீஷ் தலைமையிலான குழுவினர் மற்றும் வருவாய்துறையினர் நேற்று நேரில் சென்று, மூழ்கி உள்ள விளைநிலங்களை ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் மாரி ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X