கம்மாபுரம்:என்.எல்.சி., பரவாறு ஓடை தண்ணீர் நேரடியாக கம்மாபுரம் சம்பு ஏரியில் புகுந்ததால், கரை உடைப்பு ஏற்பட்டது.
தாசில்தார் கவியரசு முன்னிலையில், கரையை பலப்படுத்தும் பணி நடந்தது. நெய்வேலி விரிவாக்க பணி காரணமாக பரவனாறு ஓடை, கம்மாபுரம் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டது. என்.எல்.சி., நிர்வாகத்தால் கரி வெட்டி எடுத்துவிட்டு, கழிவுகள் மற்றும் மணல் கம்மாபுரம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொட்டப்படுகிறது.பெய்து வரும் கனமழை காரணமாக என்.எல்.சி., மணல் மேட்டிலிருந்து, மணல் சரிந்து, பரவனாறு ஓடை துார்ந்தது. இந்த, ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, ஊ.கொளப்பாக்கம், கொம்பாடிக்குப்பம், கம்மாபுரம், கோபாலபுரம், சு.கீனனுார், வி.சாத்தப்பாடி, தர்மநல்லுார் கிராமத்தில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர் நிலங்களில் மழைநீர் சூழ்ந்தது.மேலும், மணல் மேட்டின் மழைநீர் கம்மாபுரம் கிராமத்திலுள்ள சம்பு ஏரியில், நேரடியாக புகுந்ததில் கரை உடைப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தாசில்தார் கவியரசு முன்னிலையில், என்.எல்.சி., ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் உடைப்பு ஏற்பட்ட கரையை பலப்படுத்தும் பணி நடந்தது.பி.டி.ஓ., தண்டபாணி, மண்டல துணை தாசில்தார் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, வி.ஏ.ஓ., ஜெயஸ்ரீ, இளநிலை உதவியாளர் சந்துரு, ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE