பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு 4 ஓட்டுகள் 2,577 ஓட்டுப்பதிவு மையங்கள் தயார்

Added : டிச 04, 2019
Advertisement
 உள்ளாட்சி தேர்தலுக்கு 4 ஓட்டுகள் 2,577  ஓட்டுப்பதிவு மையங்கள் தயார்

திருவள்ளூர்:'ஊரக உள்ளாட்சி தேர்தலில், வாக்காளர்கள், நான்கு ஓட்டுகள் போட வேண்டும். இதற்காக, 14 ஒன்றியங்களில், 2,577 ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன' என்று, மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இம்மாதம் இறுதியில், இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 14 ஊராட்சி ஒன்றியங்களில், 526 கிராம ஊராட்சி தலைவர், 3,945 ஊராட்சி வார்டு உறுப்பினர், 230 ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் 24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, தேர்தல் நடக்கிறது.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருடன், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் மகேஸ்வரி, நேற்று ஆலோசனை நடத்தினார்.

எஸ்.பி., அரவிந்தன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகநாயகி உட்பட பலர் பங்கேற்றனர்.பின், கலெக்டர் மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஊரக உள்ளாட்சி தேர்தல், டிச., 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக, 14 ஒன்றியங்களிலும், 2,577 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இம்மையங்களில், ஒவ்வொரு வாக்காளரும், நான்கு ஓட்டுகள் போட வேண்டும்.பதிவாகும் ஓட்டுகள், அந்தந்த ஒன்றிய பகுதிகளில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.ஜன., 2ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள, ஊரக உள்ளாட்சி தேர்தலில், 6 லட்சத்து, 68 ஆயிரத்து, 85 ஆண்; 6 லட்சத்து, 38 ஆயிரத்து, 337 பெண்; 223 திருநங்கையர் என, மொத்தம், 13 லட்சத்து, 56 ஆயிரத்து, 639 வாக்காளர்கள் உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X