சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரிக்கு சென்ற மாணவியை கடத்தப்பட்டதாக தந்தை புகார்

Added : டிச 04, 2019
Advertisement

சிதம்பரம்:கல்லுாரிக்கு சென்ற மகளை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
சிதம்பரம் சம்மந்தக்கார தெருவை சேர்ந்தவர் முத்தையன் மகன் ரமேஷ் 47. இவரது மகள் தீபா, 18. கல்லுாரி மாணவி. அதே பகுதி கொத்தனார் குடியிருப்பை சேர்ந்த சந்திரகுமார் மகன் கலியபெருமாள், 19; தீபாவை காதலித்து வந்தார். இதற்கு தீபா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடந்த 2ம் தேதி காலை கல்லுாரிக்கு சென்ற தீபா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது காதலித்து வந்த கலியபெருமாள், கல்லுாரிக்கு சென்று தீபாவை கடத்தி சென்றுவிட்டதாக தெரிய வந்தது. இது குறித்து தந்தை ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X