பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு: கலெக்டர் அன்புச்செல்வன் பேட்டி

Added : டிச 04, 2019
Advertisement


கடலுார்:கடலுார் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர் என கலெக்டர் அன்புச்செல்வன் கூறினார்.

இது குறித்து கலெக்டர் அன்புச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 29ம் தேதி முதல் 3 நாட்கள் கனமழை பெய்தது. பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. மாவட்டத்தில் 608 வீடுகள் பகுதியாகவும், 53 வீடுகள் முழு அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 83 ஓட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தவிர 22 மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். வீட்டில் தண்ணீர் சூழ்ந்து சமைக்க முடியாதவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. நெய்வேலியில் உள்ள கொளக்குடி ஏரிக்கரை உடைந்து 500 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான வீராணம், பெருமாள், வாலாஜா ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 10,500 ஏக்கர் மணிலா வயலில் தண்ணீர் தேங்கியுள்ளது. இது பாதிக்கப்படுமா என வேளாண் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதேபோல், நெல் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அந்த பணி முடிந்த பின்னர் தான் சேதமதிப்பு தெரியவரும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X