பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர், தெருவிளக்கு, குப்பை? பிரச்னைகளுக்கு 'வாட்ஸ் ஆப்' எண்

Added : டிச 04, 2019
Share
Advertisement
ஊத்துக்கோட்டை:பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில், குடிநீர், தெருவிளக்கு, குப்பை தேங்கியது குறித்து, பொதுமக்கள் புகார் அனுப்ப, 'வாட்ஸ் ஆப்' எண்ணை அறிவித்து உள்ளது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இதில், 100க்கும் மேற்பட்ட தெருக்களில், 3,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 700க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள்
 குடிநீர், தெருவிளக்கு, குப்பை? பிரச்னைகளுக்கு 'வாட்ஸ் ஆப்' எண்

ஊத்துக்கோட்டை:பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில், குடிநீர், தெருவிளக்கு, குப்பை தேங்கியது குறித்து, பொதுமக்கள் புகார் அனுப்ப, 'வாட்ஸ் ஆப்' எண்ணை அறிவித்து உள்ளது.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இதில், 100க்கும் மேற்பட்ட தெருக்களில், 3,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 700க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.பேரூராட்சி ஊழியர்கள் மூலம், தினமும், 3 டன் குப்பை சேகரிக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் எடுத்து செல்லப்பட்டு, மக்கும், மக்காத குப்பை என, தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுகிறது.

வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில், குடிநீர், தெருவிளக்கு, குப்பை தேக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் வந்து புகார் செய்ய தேவையில்லை.

அதற்கு மாற்றாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 'வாட்ஸ் ஆப்' எண் ஒன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட பிரச்னை குறித்து, பொதுமக்கள், 78240 58010 என்ற மொபைல்போன் எண்ணிற்கு படத்துடன் தகவல் தெரிவிக்கலாம்.பேரூராட்சி அலுவலகத்தில், இந்த எண் குறித்த தகவல் வைக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X