சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் கடையில் திருட்டு மேலும் ஒரு மாணவர் கைது

Added : டிச 04, 2019
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் லேப்டாப், மொபைல் போன்கள் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பெரியார் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 36. பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே மொபைல் போன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் தொடர்ச்சியாக இருமுறை மொபைல் போன்கள், மெமரி கார்டுகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடுபோனது.அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பள்ளி சீருடையில் வரும் நான்கு மாணவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.இது தொடர்பாக, விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் மூவரை கைது செய்த போலீசார், அரசு பள்ளியில் திருடிய 7 லேப்டாப்கள், 4 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அதில், தலைமறைவாக இருந்த மற்றொரு 17 வயதுடைய மாணவர், விருத்தாசலம் அடுத்த வயலுார் பஸ் நிறுத்தத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X