எலி கடித்த காயத்துடன் இறந்த மூதாட்டி

Added : டிச 04, 2019
Advertisement

புதுச்சேரி:பி.ஆர்.டி.சி., பஸ்சில் எலி கடித்த காயத்துடன் இறந்து கிடந்த மூதாட்டி உடலை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி கென்னடி நகர் சின்ன சுப்ராயப்பிள்ளை சத்திரம் அருகே தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த அலுவலகம் எதிரே உள்ள காலிமனையில் எறிந்த நிலையில் பி.ஆர்.டி.சி., பஸ் (பி.ஒய் 01. பி.சி., 2926) ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சினுள் கடந்த 1ம் தேதி மதியம் 1.30 மணியளவில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடந்தார். அவரது வலதுதோள் பட்டையில் எலி கடித்து குதறிய காயம் இருந்தது. அவர் வயது முதுமை காரணமாக இறந்தாரா அல்லது நோய் காரணமாக இறந்தாரா என உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X