பொது செய்தி

இந்தியா

கராத்தே போட்டி பரிசளிப்பு விழா

Added : டிச 04, 2019
Advertisement
 கராத்தே போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி:மாநில அளவிலான கராத்தே மற்றும் கிக் பாக்சிங் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி மாநில அளவிலான கராத்தே மற்றும் கிக் பாக்சிங் போட்டி கடந்த மாதம் 30ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் வரை, நத்தமேடு தனியார் பள்ளியில் நடந்தது.போட்டிகள் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், ஓபன் ஆகிய பிரிவுகளில் நடந்தது. போட்டியில் மாநிலத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகுமார், விமல், செபஸ்தீன், அபிலாஷ், தினேஷ், வெங்கட், அழகு ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு, புதுச்சேரி கராத்தே சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கிக் பாக்சிங் சங்க துணை தலைவர்கள் மோகன், சந்திரகுமார், சுரேஷ்பூபதி, அய்யனார், பிரவீன்குமார், துணை செயலர்கள் அமிர்தராஜ், அசோக், கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹோலிபிளவர் பள்ளி சேர்மன் வெங்கடேசன், இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதுச்சேரி இயக்குனர் முத்து கேசவேலு, கோ கோ சங்க செயலர் ஜேசு ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X