பொது செய்தி

இந்தியா

பாழடைந்த சமுதாய நலக்கூடம்

Added : டிச 04, 2019
Share
Advertisement
பாகூர்:சார்காசிமேடு கிராமத்தில், பாழடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக சமுதாய நலக்கூடம் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட சார்காசிமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. பயன்பாட்டில் இருந்து வந்த சமுதாய நலக்கூடம் முறையாக
 பாழடைந்த சமுதாய நலக்கூடம்

பாகூர்:சார்காசிமேடு கிராமத்தில், பாழடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக சமுதாய நலக்கூடம் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட சார்காசிமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. பயன்பாட்டில் இருந்து வந்த சமுதாய நலக்கூடம் முறையாக பாராமரிக்கப்படவில்லை. இதனால், கட்டடம் சேதமடைந்த நிலையில் சமுதாய நலக்கூட வளாகம் தற்போது மாடுகளை கட்டி வைக்கும் தொழுவமாக மாறியது.இதனால், சார்காசிமேடு கிராம மக்கள் தங்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்திட பொது இடம் இல்லாததால், பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண நிலையங்களில், அதிக வாடகை கொடுத்து நடத்திட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பொருளாதார அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே, சார்காசிமேடு கிராமத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, புதியதாக சமுதாய நலக்கூடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X