பொது செய்தி

இந்தியா

சாலையில் தேங்கும் கழிவுநீர்

Added : டிச 04, 2019
Advertisement
 சாலையில் தேங்கும் கழிவுநீர்

பாகூர்:கிருமாம்பாக்கம் - பிள்ளையார்குப்பம் சாலையில், கழிவு நீர் வாய்க்கால் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கிருமாம்பாக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள, பெரும்பாலான வீதிகளில் கழிவு நீர் வாய்க்கால் உள்ளது. ஆனால், கிருமாம்பாக்கம் - பிள்ளையார்குப்பம் சாலையில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இதுவரை கழிவு நீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், சாலையில் தாழ்வான பகுதியில் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக, கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளிக்கும் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தொடர்ந்து கழிவு நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, பொது மக்களின் நலன் கருதி கிருமாம்பாக்கம் - பிள்ளையார்குப்பம் சாலையில் கழிவு நீர் வாய்க்கால் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X