கனவு நகரம் : திறந்து வைத்தார் கிம்

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Advertisement
கனவு நகரம் : திறந்து வைத்தார் கிம்

பையோயங்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், ஆதியில் தனது குடும்பத்தினர் வாழ்ந்த பூர்வீக பகுதியான வடக்கு மாகாணத்தில், பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன சொகுசு நகரம் ஒன்றை கட்ட திட்டமிட்டிருந்தார். தனது ஆட்சியில் இதனை ஒரு கனவு திட்டங்களில் ஒன்றாக நினைத்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வந்தார்.
தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும், தாமதமாகவே இந்த நகரம் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று நவீன நகரத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பல்வேறு சொகுசு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நகரத்துக்கு 'சம்ஜியோன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், கலாசார மையம் மற்றும் உயர்தர மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த நகரத்தில் 4 ஆயிரம் குடும்பங்கள் வசிக்க முடியும். நவீன நாகரிகத்தின் வடிவமாக இந்நகரம் திகழும் என அந்நாட்டு அரசு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
04-டிச-201914:39:41 IST Report Abuse
narayanan iyer மற்றவர்களின் வசதிக்கு அமைக்கப்பட்டிருந்தால் வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X