சம்பளம் வழங்காததை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

Added : டிச 04, 2019
Advertisement
 சம்பளம் வழங்காததை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

காட்டேரிக்குப்பம்:பாண்கோஸ் பள்ளி ஆசிரியர்கள் 11 மாத சம்பளத்தை உடன் வழங்க வலியுறுத்தி நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் பாண்கோஸ் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில், அரசு நிதிஉதவி பெறும் 20 ஆசிரியர்களும், நிதியுதவி பெறாத 25 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றும் அரசு நிதியுதவி பெறாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலை நிர்வாகம் சம்பளம் வழங்கி வந்தது. இந்நிலையில், கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்பு அரவை பணி துவங்கப்படாமல், கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், பள்ளியில் பணியாற்றும் நிதியுதவி பெறாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 11 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து, பாண்கோஸ் பள்ளியின் அரசு நிதியுதவி பெறாத 25 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை 10:00 மணி முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் ஆலை நிர்வாகம் சார்பில் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாததால், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால், பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X