புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபை மதிப்பீட்டுக் குழு கூட்டம் நேற்று நடந்தது.புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி, செப்டம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.
அப்போது, மதிப்பீட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களை, சபாநாயகர் அறிவித்தார்.இதையடுத்து, மதிப்பீட்டுக் குழுவின் முதல் கூட்டம், சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று நடந்தது. குழுவின் தலைவரான அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் செல்வம், ஜெயமூர்த்தி, சங்கர், விஜயவேணி, அசனா உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சட்டசபை செயலர் வினசென்ட் ராயர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.மதிப்பீட்டுக் குழுவை அடிக்கடி கூட்டுவது என்றும், அரசு துறைகளில் ஆய்வு மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.முதல்கட்டமாக, மின்துறை அலுவலகத்திற்கு அடுத்த வாரம் சென்று ஆய்வு மேற்கொள்வது என்றும், தடையில்லா மின்சார வினியோகம், மின்சாதன உதிரி பாகங்கள் இல்லாதது, டிஜிட்டல் மீட்டர் போன்ற விஷயங்கள் தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE