சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மரம் கடத்தல் : குற்றவாளி தப்பியோட்டம்

Added : டிச 04, 2019
Advertisement

நகரி:செம்மரக்கட்டை கடத்திய வாலிபர், நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும்போது, சிறுநீர் கழித்து வருவதாக கூறி, போலீசாரிடம் இருந்து இரண்டாவது முறையாக தப்பியோடினார்.

சித்துார் மாவட்டம், பிச்சாட்டூர் பகுதியில் இருந்து, கடந்த மாதம், 5ம் தேதி, தமிழகத்திற்கு செம்மரங்கள் கடத்தியபோது, பீச்சாட்டூர் போலீசார், இருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், பிச்சாட்டூர் அடுத்த, பிள்ளையார் கண்டிகை அஜித்குமார், 35, செங்குன்றம் முத்துமணி, 32 என தெரிய வந்தது.இருவரையும், போலீசார் வேனில் ஏற்றிக் கொண்டு, சத்தியவேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றனர்.

அப்போது, பாதி வழியில் அஜித்குமார், முத்துமணி இருவரும், சிறுநீர் கழித்து வருவதாக போலீசாரிடம் கூறி, தப்பியோடினர்.இந்நிலையில் நேற்று முன்தினம், பிச்சாட்டூர் போலீசார், அஜித்குமாரை மீண்டும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.அதை தொடர்ந்து, அஜித்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, இருசக்கர வாகனத்தில் போலீசார் அழைத்து சென்ற போது, காலை கடனை கழிக்க வேண்டும் என கூறி, அஜித்குமார் போலீசாரிடம் இருந்து மீண்டும் தப்பியோடினர்.முத்துமணி தொடர்ந்து தலைமறைவாகி உள்ளார். பிச்சாட்டூர் போலீசார் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X