முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன் மரணம்

Added : டிச 04, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன் உடல்நலமின்றி இறந்தார்.
புதுச்சேரி பாகூர் அடுத்த குருவிநத்தத்தை சேர்ந்தவர் ராமநாதன், 71; குருவிநத்தம் தொகுதி யில் 1985 மற்றும் 1990 ஆகிய இரண்டு முறை, சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக இருந்தார். தி.மு.க.,வில் இருந்து வைகோ பிரிந்தபோது ம.தி.மு.க.,வை துவக்கியபோது, அக்கட்சியில் இணைந்து, மாநில செயலராக இருந்தார். பின்னர், சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வழக்கம்போல் மருத்துமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு, பகல் 12:00 மணியளவில் இறந்தார். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவியும், ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகிய இரு மகன்களும், கல்பனா என்ற மகளும் உள்ளனர்.இவரது உடல் சொந்த ஊரான குருவிநத்தத்தில் இன்று காலை தகனம் செய்யப்படுகிறது.இறந்த ராமநாதனின் மகன் ராதாகிருஷ்ணன், புதுச்சேரி சபாநாயகராகவும், என்.ஆர்.காங்.எம்.பி.,யாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X