சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தூக்கிலிட கோரீ நூதன போராட்டம்

Added : டிச 04, 2019
Advertisement
 பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை வழக்கு  குற்றவாளியை தூக்கிலிட கோரீ நூதன போராட்டம்

திருவள்ளூர்:நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு துாக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி, உறவினர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த, நான்கு வயது சிறுமியை, கடந்த ஜூன் 27ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரர், மீனாட்சி சுந்தரம், என்பவர், பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார்.இது குறித்து, அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், திருமுல்லைவாயல் போலீசார், மீனாட்சி சுந்தரத்தை, கைது செய்தனர்.

அவரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யக் கோரி, பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கிடையே, மீனாட்சி சுந்தரம் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு, முதல் முறையாக திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து, நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காகவும், உடந்தையாக இருந்த அவரது மனைவியையும், துாக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என, சிறுமியின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், வாயில் கறுப்பு துணி கட்டி கையில் பதாகைகளை ஏந்தியவாறு, நீதிமன்ற நுழைவு வாயிலில் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் டவுன் போலீசார் வந்து, அனுமதி பெறாமல் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என, கூறியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X