மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டர் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டது

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டர் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டது

புதுச்சேரி:புதுச்சேரியில் மீட்கப்பட்ட ராக்கெட் பூஸ்டரை, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வுக்காக ஸ்ரீஹரிகோட்டா கொண்டு சென்றனர்.

புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையம், மீனவர்கள் நேற்று முன்தினம் 10 நாட்டிகல் தொலைவில் மீன் பிடிக்க வீசிய வலையில் கனமான பொருள் சிக்கியது.அதனை கரைக்கு இழுத்து வந்தபோது, சமீபத்தில் இஸ்ரோ விண்ணில் ஏவிய பி.எஸ்.எல்.வி. சி 46 ராக்கெட்டை உந்தி தள்ளுவதற்கு எரிபொருள் ஏற்றி செல்லும் 13.5 மீட்டர் நீளம் கொண்ட ராக்கெட் பூஸ்டர் என தெரிய வந்தது.இதுகுறித்து கலெக்டர் அருண், இஸ்ரோவுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நேற்று வம்பாகீரப்பாளையம் வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், கடற்கரையில் இருந்த ராக்கெட் பூஸ்டரை கிரேன் மூலம் எடுத்து செல்ல தயாராகினர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள், ராக்கெட் பூஸ்டரை கரைக்கு இழுத்து வர பயன்படுத்திய நான்கு வலைகள் அறுந்து சேதமடைந்ததால், அதற்குரிய இழப்பீட்டு தொகை ரூ. 10 லட்சம் வழங்கிவிட்டு எடுத்து செல்ல வலியுறுத்தி அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட் உதிரி பாகங்கள் வழக்கமாக கடலில் விழுந்தால், தண்ணீரில் மூழ்கி விடும். பூஸ்டர் தண்ணீரில் விழும் போது சேதமடைந்ததால், மூழ்காமல் மிதந்துள்ளது. இதனால், எங்களுக்கு எந்த பயனும் இல்லை. மீண்டும் மறு சுழற்சிக்காக இரும்பு கடைக்கு தான் அனுப்புவோம். நிவாரணம் அளிக்க விதிகளில் இடமில்லை. எதிர்ப்பு தெரிவித்தால், இங்கேயே விட்டுவிட்டு செல்வதாக கூறினர்.அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர். பின்னர் மதியம் 2:30 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட் பூஸ்டரை ராட்சத கிரேன் மூலம் டிரெய்லர் லாரியில் ஏற்றி, ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு சென்றனர்.வெடிபொருள் வளையம் மாயம்ராக்கெட் தவறான திசையில் சென்றால், அதனை வெடிக்க வைக்க வெடிபொருள் வளையம் பூஸ்டரின் முன் மற்றும் பின் பகுதியில் பொறுத்தப்பட்டிருக்கும். வெடிக்கும் திறன் கொண்ட இந்த வளையம், ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.
வெப்பம் அதிகரித்தாலும், அழுத்தமான பொருள் விழுந்தாலும் வெடித்து விடும்.அதன்படி, மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டரின் பின் பகுதியில் இருந்த வெடிபொருள் வளையத்தை இஸ்ரோ குழுவினர் பாதுகாப்பாக அகற்றினர். முன்பகுதி வளையத்தில் 30 செ.மீ., அளவுக்கு இல்லை. இதுகுறித்து இஸ்ரோ குழுவினர் அளித்த தகவலின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் மீனவ கிராமத்தில் ராக்கெட் பூஸ்டரில் வெடிபொருள் வளையத்தின் ஒருபகுதி மாயமானது குறித்தும், அது வெடிக்கும் தன்மை கொண்டதால், அதனை யாரேனும் எடுத்திருந்தால், ஒப்படைக்க கோரி மைக் மூலம் அறிவிப்பு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201914:57:52 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மீனவர்கள் கண்ண்டுபிடிக்கலைன்னாலும் எங்களுக்கு முன்பே தெரியும், அது அங்கே தான் இருக்குன்னு.. எங்க பிளாக் கில் நாங்க எப்பவோ இதை சொல்லிட்டோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X