புதுச்சேரி:புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க பொதுப்பேரவைக் கூட்டம் கம்பன் கலையரங்கில் நடந்தது.சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்த கூட்டத்தில், கடந்த நிதி ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை வாசித்து ஏற்கப்பட்டது. இந்த நிதி ஆண்டிற்கான உத்தேச வரைவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி கூப்பன் அளவு ரூ.1,750ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்துவது, வெகுமதி கூப்பன்களுக்கான தொகை உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது, குறுகிய காலக்கடன் தொகை ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரித்து வழங்குவது, குறுகிய காலக்கடன் தவணைக்காலத்தை 25 மாதமாக அதிகரிப்பது, குறுகிய கால கடனுக்கு விண்ணப்பிக்க சம்பள ரசீதில் சுய சான்று அளித்து சமர்பிக்க மாற்றம் செய்யப்பட்டது.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சங்க செயலர் ராஜலிங்கம் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE