சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி தற்கொலை

Added : டிச 04, 2019
Advertisement

கும்மிடிப்பூண்டி: வாங்கிய கடனை திருப்பி தர முடியாததால், தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி அருகே, பாத்தப்பாளையம் கிராமத்தில் வசித்தவர் சீனிவாசன் மகன் பிரகாஷ், 38. இவர், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். பெரியபாளையம் அடுத்த, ஆரணியைச் சேர்ந்த அவரது உறவினரிடம், 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.

கடன் கொடுத்தவர், கடந்த மாதம், 7ம் தேதி, உடனடியாக திருப்பி தர வேண்டும் என, வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.கடனை தர இயலாத சூழலில், அன்றைய தினம், பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ், நேற்று, இறந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X