ஸ்ரீபெரும்புதுாரில் சாலை சேதம்

Added : டிச 04, 2019
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், குண்டும், குழியுமாக உள்ள சாலையால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, பெங்களூர் பிரதான சாலை என, மூன்று சாலை சந்திக்கும் இடத்தில், மணிக்கூண்டு உள்ளது. இதன் அருகே உள்ள சாலை சேதமடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் சாலைகள்,
 ஸ்ரீபெரும்புதுாரில் சாலை சேதம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், குண்டும், குழியுமாக உள்ள சாலையால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் காந்தி சாலை, திருவள்ளூர் சாலை, பெங்களூர் பிரதான சாலை என, மூன்று சாலை சந்திக்கும் இடத்தில், மணிக்கூண்டு உள்ளது. இதன் அருகே உள்ள சாலை சேதமடைந்து, குண்டும், குழியுமாக உள்ளது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

ஸ்ரீபெரும்புதுார் சாலைகள், நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஏற்கனவே குறுகலாக உள்ளன.இந்நிலையில், சாலையும் சேதமடைந்து இருப்பதால், ஸ்ரீபெரும்புதுார் பகுதியை கடந்து செல்ல அவதிக்குள்ளாகிறோம்.சாலை பள்ளத்தால், காலை, மாலை நேரத்தில், வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. இதனால், சேதமான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X