பொது செய்தி

இந்தியா

மழை பாதிப்பு: அமைச்சர் ஆய்வு

Added : டிச 04, 2019
Advertisement

காரைக்கால:காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கமலக்கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
காரைக்காலில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.இந்நிலையில் மதகடி. தோமஸ் அருள்விதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேற்றப்படாததால், துர்நாற்றம் வீசத் துவங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் கமலக்கண்ணனிடம் முறையிட்டனர்.அதன்பேரில் சம்பவ இடத்தை பார்வையிட்ட அமைச்சர் கமலக்கண்ணன், மழை நீரை வெளியேற்றவும், அப்பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை உடனடியாக பிடித்து வெளியேற்றவும், தடைபட்ட மின்சாரத்தை உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.ஆய்வின் போது கலெக்டர் விக்ரந்தராஜா, துணை கலெக்டர் ஆதாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X