பொது செய்தி

இந்தியா

பல்கலையில் கருத்தரங்கம்

Added : டிச 04, 2019
Advertisement

காரைக்கால்:காரைக்காலில் புதுவைப் பல்கலைக்கழக வளாகத்தில் மேலாண்மை துறை சார்பில் பிஸ்.பிஸ்மா 2019 என்ற காப்பீடு துறை மேம்பாட்டுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு கலெக்டர் விக்ரந்தராஜா குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிலைய பேராசிரியர் ஆஞ்சநேயசுவாமி முன்னிலை வகித்தார். கோவா கிவ்கோவா நிறுவன தலைவர் விட்டல் சுகதான்கா, திருச்சி இந்தியன் மேலாண்மை நிறுவன இயக்குனர் பிமராயமேட்ரி, வினாயக மிஷன் மருத்துவக் கல்லுாரி முதல்வர் அம்புஜம், காரைக்கால் புதுவை பல்கலைக் கழக தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் மேலாண்மை துறையில் மாணவர்களுக்கு காப்பீடு நிறுவனம் குறித்து பல்வேறு கருத்துக்கள் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X