புதுச்சேரி:புதுச்சேரி ராஜா தியேட்டர் சிக்னலில், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை போக்குவரத்து போலீஸ்காரர், மண் கொட்டி சரி செய்தனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மழை காரணமாக, ஆங்காங்கே சாலைகள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. புதுச்சேரி, அண்ணா சாலை, ராஜா தியேட்டர் சிக்னல் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.அப்போது, சிக்னலில் பணியாற்றிய போக்குவரத்து போலீஸ்காரர், சாலையோரம் கிடந்த மண்ணை அள்ளி, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் கொட்டி சரிசெய்தார். பள்ளத்தை மண் கொட்டி சரி செய்த போக்குவரத்து போலீஸ்காரரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.