சாலை பள்ளம் சீரமைப்பு

Added : டிச 04, 2019
Advertisement
 சாலை பள்ளம் சீரமைப்பு

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சியின், 15 வார்டுகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இப்பகுதிகளில், 53 கோடி ரூபாயில், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், ஓராண்டாக நடந்து வருகின்றன.

இதில், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர் ஆகிய பகுதிகளில், ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் பல தெருக்களின் நடுவில், 10 அடி பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.குழாய்கள் பதிக்கப்பட்ட இடத்தில், முறையாக மண் கொட்டி, சமன் செய்யவில்லை.இதனால், சமன் செய்யப்படாத இடத்தில் வாகனங்கள் சென்று வந்ததால், சாலை நடுப் பகுதி வரை, பெரிய பள்ளம் ஏற்பட்டது.

குறிப்பாக, கந்தசுவாமி கோவில் மேற்கு மாடவீதி, ஓ.எம்.ஆர்., சாலை அமைந்துள்ள பிரதான சாலையில், 'மெகா' பள்ளங்கள் ஏற்பட்டு, அவற்றில் மழைநீர் தேங்கியது.இது குறித்த செய்தி, நமது நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக, சாலை பள்ளத்தில் மண் கொட்டி, ஜே.சி.பி., இயந்திரத்தால் சமன்செய்து சீரமைக்கும் பணியை, பாதாள சாக்கடை திட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் காலை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X