முதல்வர் அலுவலக வாயில் முன் தர்ணா: அ.தி.மு.க., - என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் அதிரடி

Added : டிச 04, 2019
Advertisement
 முதல்வர் அலுவலக வாயில் முன் தர்ணா: அ.தி.மு.க., - என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் அதிரடி

புதுச்சேரி:இலவச அரிசிக்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வலியுறுத்தி, அ.தி.மு.க., - என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் அலுவலக வாயில் முன் தர்ணா நடத்தினர்.
சட்டசபை அ.தி.மு.க., குழு தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர், சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலக வாயில் முன் நேற்று மதியம் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.பல மாதங்களாக வழங்காமல் உள்ள இலவச அரிசிக்கான பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வலியுறுத்தி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நடத்திய இந்த போராட்டத்தில், என்.ஆர். காங்., எம்.எல்.ஏ., செல்வமும் பங்கேற்றார்.போராட்டத்தில் ஈடுபட்ட அன்பழகன் எம்.எல்.ஏ., கூறும்போது, 'காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைந்த 42 மாதங்களில், 23 மாதங்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. வழங்காத அரிசிக்குரிய பணத்தையும் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை. இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இலவச அரிசிக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியாண்டின் துவக்கமான ஏப்ரலில் இருந்து, நவம்பர் மாதம் வரை 8 மாதங்களாக தொடர்ந்து அரிசி வழங்கவில்லை. அரிசி வழங்கப்படாத நிலையில், 8 மாதத்திற்கான பணத்தையும் வங்கியில் செலுத்தாமல் உள்ளனர்.எனவே, மாநிலத்திலுள்ள 1.66 லட்சம் சிவப்பு அட்டைதாரர்களுக்கு 8 மாதத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600 வீதம் மொத்தம் 4,800 ரூபாயும், 1.78 லட்சம் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 300 ரூபாய் வீதம் மொத்தம் 2,400 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால், மக்களை திரட்டி மாநில அளவில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம்' என்றார்.இதற்கிடையில், முதல்வர் நாராயணசாமி, அன்பழகன் எம்.எல்.ஏ.,வை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசி, அரிசிக்குரிய பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். சமூகத் நலத் துறை அமைச்சர் கந்தசாமியும் நேரில் வந்து உறுதி அளித்தார். இதையடுத்து, அ.தி.மு.க., - என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X