பொது செய்தி

இந்தியா

விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கல்

Added : டிச 04, 2019
Advertisement
 விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கல்

வில்லியனுார்:பூர்ணாங்குப்பம் உழவர் உதவியகத்தில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது.

வேளாண்துறை சார்பில் பூர்ணாங்குப்பம் உழவர் உதவியகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் சிவசுப்ரமணியன் வரவேற்றார். வேளாண் அலுவலர் (வேதியியல்) அமர்ஜோதி, பயிர் வளர்ச்சிக்கு தேவையான பேரூட்டச்சத்து மற்றும் நுண்ணுாட்டச்சத்து குறித்து பேசினார்.வேளாண் அலுவலர் நடராஜன், இயற்கை விவசாயத்தின் மண் வளம் குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். வேளாண் அலுவலர் பரமநாதன், துணை வேளாண் இயக்குனர் சந்தானகிருஷ்ணன், விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கி அதன் முக்கியத்துவம் குறித்து பேசினர். காமராசர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ரவி மண்வள அட்டை மூலம் நிலைத்த நீடித்த வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.முகாமில் பூர்ணாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண்வள அட்டைகளை பெற்றுக்கொண்டனர். வேளாண் அலுவலர் சுசிகலா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X