வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு அகில இந்திய காங்., செயலர் பேட்டி

Added : டிச 04, 2019
Advertisement

புதுச்சேரி:நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக அகில இந்திய காங்., பொறுப்பாளர் சஞ்சய்தத் கூறினார்.
அகில இந்திய காங்., செயலரும் புதுச்சேரி காங்., மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்தத் நேற்று, புதுச்சேரி காங்., அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து, டில்லியில் அகில இந்திய காங்., சார்பில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் கூறுகையில், இந்திய பொருளாதரம் கடும் சரிவை நோக்கி செல்வது குறித்து பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைந்து வருகிறது. இது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் பிரதமரும், நிதி அமைச்சரும் பொருளாதாரம் எதிர்கொள்ளும், நெருக்கடியை ஒப்புக்கொள்ள தவறிவிட்டனர். ஒரு நோய் இருப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே உரிய சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் நிதி நெருக்கடி இருப்பதை அரசு ஏற்றுக்கொள்ள தவறிவிட்டது.தொழில்துறை உற்பத்தி, ரியல் எஸ்டேட், தனியார் முதலீடு மற்றும் முக்கிய துறைகளில் வளர்ச்சி மற்றும் நுகர்வு நிலை ஆகியவை எதிர்மறையான பாதையில் செல்கிறது. வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மிகைப்படுத்துவதிலும், பொய்யை பரப்புவதிலும், மோடி தலைமையிலான மத்திய அரசு வளர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X