தமிழ்நாடு

 ஒன்றிய அலுவலகங்களுக்கு போட்டியாளர்கள்...படையெடுப்பு!:தேர்தல் அறிவிப்பால் கல்வெட்டுகள் மறைப்பு;உற்சாகமின்றி காணப்படும் அரசியல் கட்சியினர்

Added : டிச 04, 2019
Advertisement
  ஒன்றிய அலுவலகங்களுக்கு போட்டியாளர்கள்...படையெடுப்பு!:தேர்தல் அறிவிப்பால் கல்வெட்டுகள் மறைப்பு;உற்சாகமின்றி காணப்படும் அரசியல் கட்சியினர்

 காஞ்சிபுரம்:உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், போட்டியாளர்கள் பலர், சந்தேகங்களை தீர்த்து கொள்ள, ஒன்றிய அலுவலகங்களுக்கு படையெடுக்கின்றனர். சில கட்சியினர், தேர்தல் நடக்குமா என, குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், உள்ளாட்சி அமைப்புகள், கட்சிகளின் கல்வெட்டு உள்ளிட்டவற்றை மறைத்து வருகின்றன.

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் தேதியை, மாநில தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம் அறிவித்தது. வரும், 27 மற்றும் 30ம் தேதி என, இரண்டு கட்டங்களாக, தேர்தல் நடைபெற உள்ளது.


குறைதீர் கூட்டம்



நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்னும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாததால், நகர்ப்புற அரசியல் கட்சியினர் பலரும், தேர்தல் தேதியை எதிர்பார்த்துஉள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், கிராமங்களில் உள்ள அரசியல் கல்வெட்டுகள், தலைவர்களின் படங்கள் ஆகியவை மறைக்கப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசியல் கட்சியினர் கல்வெட்டுகளை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மறைத்து வருகின்றன. அதேபோல், 'அரசு சார்பில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது நடைபெறாது' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு அலுவலகங்களில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

இதற்கிடையே, ஊராட்சி தலைவர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், ஒன்றிய அலுவலகங்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.குறுகிய நாட்கள்திருப்போரூர் ஒன்றியத்தின், 50 ஊராட்சிகளைச் சேர்ந்த, தேர்தலில் போட்டியிடுவோர் மற்றும் அரசியல் கட்சியினர், வாக்காளர் பட்டியல் வாங்குதல், இட ஒதுக்கீடு கேட்டறிதல், தேர்தல் வேட்பு மனுக்களுக்கான ஆவணங்கள் குறித்த விபரங்கள் அறிய, ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து, அதிகாரிகளை சந்தித்து செல்கின்றனர்.

இதேபோல், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களி லும், கரைவேட்டியினர் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.அரசியல் கட்சி அலுவலகங்களிலும், முக்கிய பிரமுகர் வீடுகளிலும், திருப்போரூர் எம்.எல்.ஏ., அலுவலகங்களிலும் கட்சியினர் கூட்டம் காணப்பட்டது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 633 ஊராட்சிகளில், இப்போதே கட்சி நிர்வாகிகள், தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட துவங்கியுள்ளனர். இது குறித்து, வாலாஜாபாத் வட்டார அரசியல் கட்சியினர் கூறியதாவது:ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு, வரும், 6ல், மனு தாக்கல் துவங்கி, 13ம் தேதி நிறைவு பெறுகிறது.வரும், 16ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 18ல் மனுக்கள் வாபஸ் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி, 2ல், தேர்தல் முடிவு.

ஊராட்சி அளவிலான பதவிகளுக்கு விண்ணப்பிக்க, குறுகிய நாட்களே வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதியை, மற்றொரு தினத்தில் அறிவிப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதனால், இம்முறை தேர்தல் நடக்குமா என, சந்தேகம் மற்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X