பொது செய்தி

இந்தியா

வீடூர் அணை திறப்பால் வேகமாக நிரம்புது ஊசுட்டேரி

Added : டிச 04, 2019
Advertisement
 வீடூர் அணை திறப்பால் வேகமாக நிரம்புது ஊசுட்டேரி

வில்லியனுார்:வீடூர் அணை திறக்கப்பட்டதால், சங்கராபரணி ஆறு, சுத்துக்கேணி படுகை அணை வழியாக ஊசுட்டேரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் பெரிய ஏரியான ஊசுட்டேரி, புதுச்சேரியில் இருந்து 12 கி.மீ., தொலைவில், புதுச்சேரி பகுதியில் 390 எக்டேர் பரப்பளவும், தமிழக பகுதியில் 410 எக்டேர் என மொத்தம் 800 எக்டேர் பரப்பளவு கொண்டுள்ளது. 7.2 கி.மீ., கரையை கொண்ட இந்த ஏரியின் நீர் பிடிப்பு பகுதி15.54 சதுர கி.மீ.,ஆகும். 54 கோடி கன அடி நீர் கொள்ளளவை கொண்டது.கடந்த சில மாதங்களுக்கு முன் ஏரியில் இருந்த தண்ணீர் வறண்டு, செடி கொடிகள் வளர்ந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் ஊசுட்டேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மழை நீர் வாய்க்கால் மற்றும் ஓடைகள் வழியாக ஏரிக்கு வந்துகொண்டுள்ளது. இதனால், ஏரியில் தண்ணீர் பிடிப்பு ஏற்பட்டு, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணை முழு கொள்ளளவான 32 அடியை எட்டியதை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி படுகை அணைகள் நிரம்பியது. அங்கிருந்து வாய்க்கால் வழியாக ஊசுட்டேரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஊசுட்டேரியில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.சுத்துக்கேணி படுகை அணையில் இருந்து வழிந்தோடிய தண்ணீர் நேற்று காலை 6:15 மணிக்கு பிள்ளையார்குப்பம் படுகை அணைக்கு வந்தது. காலை 9:00 மணிக்கு படுகை அணை நிரம்பி வழிந்து சங்கராபரணி ஆறு வழியாக நேற்று மாலை வில்லியனுார்-உறுவையாறு மேம்பால படுகை அணைக்கு வந்தடைந்தது. இந்த படுகை அணை இரவு 10:00 மணிக்கு நிரம்பி, கடலை நோக்கி பயணித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X