15 கி.மீ., சுற்றும் தென்னேரி மக்கள் சாலை துண்டிப்பால் சிரமம்

Added : டிச 04, 2019
Advertisement
 15 கி.மீ., சுற்றும் தென்னேரி மக்கள் சாலை துண்டிப்பால் சிரமம்

வாலாஜாபாத்:தென்னேரி கலங்கலில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் வெளியேறி வருவதால், தென்னேரி - மேட்டு காலனி கிராமங்களுக்கு இடையேயான தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. 1 கி.மீ., கடக்க, 15 கி.மீ., சுற்றி, கிராமத்தினர் செல்கின்றனர்.

தென்னேரி - சிங்காடி வாக்கம் கிராம சாலையில், தென்னேரி மேட்டுக் காலனி, சிங்காடிவாக்கம் ஆகிய கிராமங்களில், பிரதமர் திட்ட சாலையில், தலா, 3 கோடி ரூபாயில், மூன்று உயர்மட்ட தரைப்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. ஓராண்டுக்கு மேல் மூன்று மாதங்களாகியும் ஆகியும், தரைப்பாலம் கட்டும் பணி முடியவில்லை.

இதற்கிடையே, சமீபத்தில் பெய்த வட கிழக்கு பருவ மழையால், தென்னேரி ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக, தண்ணீர் வெளியேறி வருகிறது.இதனால், தென்னேரி - தென்னேரி மேட்டு காலனி கிராமங்களுக்கு இடையே இருந்த, தற்காலிக சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால், தென்னேரி - சின்னவாக்கம் இடையே, வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டு உள்ளது.சின்னிவாக்கம், தென்னேரி மேட்டுக்காலனி கிராம மக்கள், 1 கி.மீ., துாரத்தில் இருக்கும் தென்னேரிக்கு செல்ல, நாயக்கன்குப்பம், ஊத்துக்காடு, வாரணவாசி, மஞ்சமேடு வழியாக, 15 கி.மீ., சுற்றி செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X