இந்தியா

அறிவிப்பு! 6 மாத அரிசிக்கு பதிலாக பணம்...புதுச்சேரி அரசு அதிரடி முடிவு

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019
Advertisement
அறிவிப்பு! 6 மாத அரிசிக்கு பதிலாக பணம்...புதுச்சேரி அரசு அதிரடி முடிவு

புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில் சிவப்பு ரேஷன் அட்டை தாரர்களுக்கு 20 கிலோவும், மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 கிலோவும் இலவச அரசி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.

கவர்னரின் முடிவுக்கு அமைச்சரவை எதிர்ப்பு தெரிவித்தது. அரிசியாக வழங்கினால் மட்டுமே அத்திட்டத்தின் பயன் மக்களுக்கு கிடைக்கும். பணமாக வழங்கினால் திட்டத்தின் நோக்க நிறைவேறாது என்பதால், அரிசி வழங்குவது தொடர வேண்டும் என அமைச்சரவை தெரிவித்தது. அமைச்சரவையின் ஆலோசனையை கவர்னர் ஏற்க மறுத்ததால் இப்பிரச்னை மத்திய உள்துறைக்கு சென்றது. இதனால், புதுச்சேரி மக்களுக்கு பல மாதங்களாக இலவச அரிசி வழங்கப்படவில்லை. அரிசிக்கான பணத்தை வழங்க வேண்டும் என, அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.அரிசிக்கான பணத்தை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த வலியுறுத்தி, குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., - என்.ஆர். காங்., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபை வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஜெயராம் மண்டபத்தில் நேற்று நடந்த சர்வதேச மாற்றுத் திறனாளிகள் விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசுகையில், புதுச்சேரிக்கு தரவேண்டிய பங்கை மத்திய அரசு தராததால், மாநில அரசு சலுகைகள் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இருந்தாலும், புதுச்சேரி மக்களுக்கு கடந்த 6 மாத இலவச அரிசிக்கு பணமாக வழங்க ரூ.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, 20 கிலோ அரிசிக்காக சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.3600, 10 கிலோ அரிசிக்காக மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1800 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஒரு வார காலத்திற்குள் இந்த பணம் கிடைக்கும் என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X