பொது செய்தி

இந்தியா

வங்கி கடனை தள்ளுபடி செய்ய அரசுக்கு அதிகாரமில்லை:அமைச்சர் கந்தசாமி பேச்சு

Added : டிச 04, 2019
Advertisement

புதுச்சேரி:மாற்றுத்திறனாளிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை என, அமைச்சர் கந்தசாமி பேசினார்.
புதுச்சேரி ஜெயராம் மண்டபத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் அவர் பேசியது:புதுச்சேரியில் 26 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பில் நான்கு சதவீதம் ஒதுக்கீடு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளோம். அரசுத்துறைகளில் உள்ள 7,800 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 4 சதவீத ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். தனியார் தொழிற்சாலைகளிலும் 4 சதவீதம் தர பேசி வருகிறோம். மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்த வேண்டாம். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உள்ளது. .தொழில் தொடங்குவதற்காக மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடன் ரூ.20 கோடி செலுத்தப்படாமல் உள்ளது. இதற்காக மத்திய அரசு கோர்ட்டிற்கு சென்றுள்ளது. புதுச்சேரி அரசுக்கு அசலை தள்ளுபடி செய்ய அதிகாரமும் இல்லை, நிதியும் இல்லை.
வட்டியை தள்ளுபடி செய்யவே ரூ.7 கோடி தேவைப்படுகிறது. அசலை மட்டுமாவது கட்டுங்கள். வட்டியை அரசு ஏற்றுக்கொள்ளும்.மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க தேவைப்படும் கடனில் 50 அல்லது 75 சதவீதம் மட்டுமே தருவதாகவும், மீதி கடன் பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளீர்கள். அவ்வாறு இல்லாமல் நுாறு சதவீத தொகையையும் தருவதற்கு ஏற்பாடு செய்கிறோம்.அதுபோல் இலவச மனைப்பட்டா வழங்கும்போது 4 சதவீதமும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X