சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மூழ்கிய மாணவன் கிடைக்காததால் சோகம்

Added : டிச 04, 2019
Advertisement
 ஏரியில் மூழ்கிய மாணவன் கிடைக்காததால் சோகம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, சோமங்கலம் அடுத்த பழந்தண்டலத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் கார்த்திக், 17; பிளஸ் 2 மாணவர்.கன மழையால், நிரம்பி வழிந்த சோமங்கலம் ஏரியில், நேற்று முன்தினம், நண்பர்களுடன் சேர்ந்து, துடுப்பு படகில் கார்த்திக் சென்றார்.

ஏரியின் மறுகரைக்கு செல்ல முயன்ற நிலையில், காற்று வேகமாக அடித்ததால், படகு, தண்ணீரில் கவிழும் நிலை ஏற்பட்டது.இதனால், கார்த்திக், அவரது நண்பர், சஞ்சய், 17, ஆகியோர், தண்ணீரில் குதித்து, படகை திசை திருப்ப முயன்றனர்.இதில், எதிர்பாராதவிதமாக, கார்த்திக், ஏரி நீரில் மூழ்கினார்; சஞ்சய், ஆழமற்ற இடத்தில், கழுத்தளவு தண்ணீரில் நின்று விட்டார். படகில் இருந்த மாணவர்கள், ஏரியின் மறுகரைக்கு, பத்திரமாக சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு வரை, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு படையினர், மாயமான கார்த்திக்கை தேடினர்.இந்நிலையில், இரண்டாவது நாளாக, தேசிய பேரிடர் மீட்பு படை, தமிழக பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட வீரர்கள், மோட்டார் படகு மூலம், ஏரி முழுவதும் தேடினர். ஆக்சிஜன் சிலிண்டரை பயன்படுத்தி, நீருக்குள் மூழ்கி தேடியபோதும், கார்த்திக் உடல் கிடைக்காததால், அவரது பெற்றோர், உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X