பொது செய்தி

இந்தியா

அமலோற்பவம் பள்ளியில் ரோபோ செயலாக்க நிகழ்ச்சி

Added : டிச 04, 2019
Share
Advertisement
புதுச்சேரி:அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில், உலக சாதனை படைக்கும் விதமாக ரோபோக்களின் செயலாக்க நிகழ்ச்சி நடந்தது.அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, 5 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த கல்வியாண்டு முதல் திறன் கல்வியை பயிற்றுவித்து வருகிறது. இதில், அடிப்படை அறிவியல் ரோபோட்டிக், விவசாயம், ஓவியம், வீடியோகிராபி, சிற்பம் செதுக்குதல், பூத்தையல், கைத்தொழில் போன்ற பாட
 அமலோற்பவம் பள்ளியில் ரோபோ செயலாக்க நிகழ்ச்சி

புதுச்சேரி:அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில், உலக சாதனை படைக்கும் விதமாக ரோபோக்களின் செயலாக்க நிகழ்ச்சி நடந்தது.
அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, 5 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த கல்வியாண்டு முதல் திறன் கல்வியை பயிற்றுவித்து வருகிறது. இதில், அடிப்படை அறிவியல் ரோபோட்டிக், விவசாயம், ஓவியம், வீடியோகிராபி, சிற்பம் செதுக்குதல், பூத்தையல், கைத்தொழில் போன்ற பாட இணை கல்வியை மாணவர்கள் பெற்று வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, அசிஸ்ட் உலக சாதனைகள் அமைப்பு சார்பில், உலக சாதனை படைக்கும் விதமாக ரோபோக்களின் செயலாக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், பள்ளியில் பயிலும் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களால் உருவாக்கப்பட்ட 205 ரோபோக்களின் இயக்கம் எல்லோரையும் கவர்ந்தது.மேலும், அடிப்படை அறிவியல், மின்னியல் கருத்துக்கள், ஒருங்கிணைந்த மின் சுற்றுகள், மோட்டார் செயல்படும் விதிகள், சுவிட்சுகள், ஒலிக்கருவிகள் முதலான மின்னியல் தொடர்பான படைப்புகளை மாணவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.அறிவியல் திறனை வளர்க்கும் இந்நிகழ்வை பள்ளி முதல்வர் பிரிட்டோ துவக்கி வைத்து மாணவர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் மாணவர்களின் ரோபோட்டிக் திறமையை கண்டு வியந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X