சுற்றுலா தலங்களை தனியாருக்கு விடக்கூடாது!என்.ஆர்.காங்., புவனேஸ்வரன் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுற்றுலா தலங்களை தனியாருக்கு விடக்கூடாது!என்.ஆர்.காங்., புவனேஸ்வரன் கோரிக்கை

Added : டிச 04, 2019

புதுச்சேரி:சுற்றுலா தலங்களை தனியாரிடம் ஒப்படைக்காமல், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் நடத்த வேண்டும் என, என்.ஆர். காங்., பிரமுகர் புவனேஸ்வரன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி சுற்றுலா துறை, அரசு பணத்தில் கட்டுமான பணிகளை செய்து கணிசமான வருவாயை ஈட்டித் தரக் கூடிய சுற்றுலா தலங்களை தனியாரிடம் ஒப்படைப்பது எந்த விதத்திலும் ஏற்க முடியாது. புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் என்ற அரசு துறை நிறுவனம் இருக்கும் போது, தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. சுண்ணாம்பாறு படகு குழாம் பேராடைஸ் கடற்கரையில் கீற்றுக் கொட்டகையில் உணவகங்கள் செயல்பட்டு வருவதை தவிர்க்க, ரூ.3.50 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை தனியார் படகு நிறுவனத்திடம் ஏன் ஒப்படைக்க வேண்டும். இதல் அரசின் உள்நோக்கம் உள்ளது. அரசு நிறுவனத்தை மூடுவதற்க்காகவே திட்டமிட்டு அரசே நடத்தும் இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.படித்த இளைஞர்களுக்கு அரசு துறை மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசு, அனைத்தையும் மூடிவிட்டு தனியாரிடம் கைகட்டி நிற்கும் அடிமை நிலைக்கு புதுச்சேரி மக்களைத் தள்ளிவிடுகிறது புதுச்சேரி அரசு. எனவே புதுச்சேரி அரசின் தனியார் மயக் கொள்கையை முற்றிலுமாக கைவிட்டு புதிதாக உருவாக்கப்பட்ட கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களை புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாகவே நடத்தி புதுச்சேரி இளைஞர்களுக்கு அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி அரசு ஊழியர் சம்மேளனம், அரசியல் அமைப்புக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுமக்களையும் திரட்டி சட்டசபை மற்றும் கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X