பிள்ளைப்பாக்கம் ஏரி நிரம்பியது : உபரி நீரால் போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 04, 2019
Advertisement
 பிள்ளைப்பாக்கம் ஏரி நிரம்பியது : உபரி நீரால்  போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீபெரும்புதுார்:கன மழையால் நிரம்பிய பிள்ளைப்பாக்கம் ஏரி உபரி நீர், ஸ்ரீபெரும்புதுார் - -குன்றத்துார் சாலையில் செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்றான இந்த ஏரி, 735 ஏக்கர் உடையது. இதில், 0.12 டி.எம்.சி., நீரை தேக்கி வைக்க முடியும்.கடந்த கோடைக் காலத்தில், வறண்டு கிடந்த இந்த ஏரி, சமீபத்திய பருவ மழையால், 'கிடுகிடு'வென உயர்ந்து, முழு கொள்ளளவை எட்டி, கலங்கல் வழியே உபரி நீர் வெளியேறுகிறது.

இந்நிலையில், பிள்ளைப்பாக்கம் ஏரி உபரி நீர், ஸ்ரீபெரும்புதுார் - -குன்றத்துார் சாலையில், வெங்காடு அருகே அதிக அளவில் செல்வதால், அத்தடத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால், மாற்று வழியாக, பிள்ளைப்பாக்கத்தில் இருந்து நாவளூர் வழியாக, வெங்காடு சென்று, குன்றத்துார் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X