பொது செய்தி

இந்தியா

அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்: பொதுமக்கள் கருத்துகேட்பு

Added : டிச 04, 2019
Advertisement
 அடுக்குமாடி குடியிருப்பு திட்டம்: பொதுமக்கள் கருத்துகேட்பு

புதுச்சேரி:உருளையன்பேட்டை அன்னை இந்திரா நினைவு நகரில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
புதுவை நகராட்சி கொமித்தே அமைப்பிற்குட்பட்ட அன்னை இந்திரா நினைவு நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் தொடர்பாக, அமைச்சர் கந்தசாமி, சிவா எம்.எல்.ஏ., முன்னிலையில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி, முதற்கட்டமாக 224 வீடுகள் கட்டப்பட்டு சீனியாரிட்டி அடிப்படையில் ஒதுக்கீடு செய்திடவும், மற்றவர்களுக்கும் தகுதி அடிப்படையில் வீடுகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளை ஸ்மார்ட் சிட்டி, குடிசை மாற்று வாரியம், ஆதிதிராவிடர் நலத்துறை இணைந்து செய்ய உள்ளனர்.இந்நிலையில், உருளையன்பேட்டை கென்னடி நகர் லையன்ஸ் கிளப் வளாகத்தில், அன்னை இந்திரா நினைவு நகர் பகுதி மக்களிடம், அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் சிவா எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், சீனியர் டவுன் பிளானிங் அதிகாரி விஜயநேரு, சத்தியமூர்த்தி, நகர அமைப்புக்குழு தலைவர் ஸ்ரீதரன், உறுப்பினர் செயலர் சுந்தர் செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன், குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் அனில்குமார், வருவாய் உதவி ஆய்வாளர் சகாயராஜ் உள்ளிட்ட அதிகாரிகள, குடியிருப்பு வாசிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.கூட்டத்தில், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், உருளையன்பேட்டை தொகுதி செயலர் சக்திவேல், கிளை செயலர்கள் தட்சணாமூர்த்தி, அகிலன், சசிகுமார், தர்மன், அன்னை இந்திரா நினைவு நகர் கந்தன், ரேணு, அன்பு, தமிழரசி, டேவிட், அஜிபாஷா, டைலர் வேலு, ஜேவியர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X