புதுச்சேரி:வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
சாரம் பகுதியில் டீ கடை நடத்தி வருபவர் கோபால்,66; இவர், குயவர்பாளையம், லெனின் வீதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று இரவு கோபால் தனது குடும்பத்தினருடன் வீட்டில் 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது பிரிட்ஜ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த கோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே ஓடி உயிர் தப்பினர்.பிரிட்ஜில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த பொருட்கள் மீது பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி மனோகரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. சேத மதிப்பு சுமார் இரண்டு லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE