பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் பாதை பராமரிப்பு பணிகள்: போக்குவரத்து மாற்றம்

Added : டிச 04, 2019
Advertisement

மதுரை மதுரை கோட்ட ரயில்வே சார்பில் பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (டிச.,5) முதல் 15 வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.நாகர்கோவில் - கோவை - நாகர்கோவில் ரயில் (56319/56320) டிச.,5 முதல் 15 வரை வியாழன் தவிர திண்டுக்கல் - திருப்பரங்குன்றம் இடையே ரத்து செய்யப்படும். பாலக்காடு - திருச்செந்துார்- பாலக்காடு ரயில் (56769/56770) டிச.,8, 11, 15 ஆகிய நாட்களில் மதுரை - நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையேயும், டிச., 5,6,7,10,12,13, 14 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - நெல்லை இடையேயும் ரத்து செய்யப்படும். செங்கோட்டை - மதுரை ரயில் (56734/56735) டிச.,6 முதல் 12 வரை வியாழன் தவிர விருதுநகர் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும். மதுரை - ராமேஸ்வரம் - மதுரை ரயில் (56723/56722) டிச.,11 முதல் 14 வரை உச்சிப்புளி - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படும்.தாம்பரம்-நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (16191/16192) டிச.,5 முதல் 12 வரை திண்டுக்கல்-நாகர்கோவில்ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும். எனினும் டிச.,8,15 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும், டிச.,9 ல் நாகர்கோவிலிலிருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும் வழக்கம்போல் இயக்கப்படும். திருச்சி - மானாமதுரை ரயில் (76807/) டிச.,5 முதல் 14 வரை திருச்சியிலிருந்து காலை 10:40 மணிக்கு பதிலாக காலை 10:05 மணிக்கு புறப்பட்டு மானாமதுரைக்கு பகல் 2:00 மணி 40 நிமிடங்கள் காலதாமதமாக வந்து சேரும். திருச்சி - திருவனந்தபுரம் விரைவு ரயில் (22627) டிச.,5 முதல் 15 வரை (9.12.19. தவிர) திருச்சியிலிருந்து காலை 7:10 மணிக்கு பதிலாக காலை 9:40 மணிக்கு 150 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) டிச.,5 முதல் 15 வரை வியாழன் தவிர மதுரை கோட்ட எல்லைக்குள் 125 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். சென்னை - துாத்துக்குடி இணைப்பு ரயில் (16129) டிச.,5 முதல் 15 வரை வியாழன் தவிர துாத்துக்குடிக்கு 95 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும். திருச்சி - ராமேஸ்வரம் ரயில் (56829) டிச., 5 முதல் 7 வரை மற்றும் டிச.,9 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்திற்கு 40 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும். மதுரை - திண்டுக்கல் ரயில் (56708) டிச.,5 முதல் 15 வரை வியாழன் தவிர திண்டுக்கல்லுக்கு 40 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X