டெங்குவுக்கு தினமும் 8 பேர் பாதிப்பு

Added : டிச 04, 2019
Advertisement

மதுரை, :மதுரை நகர் மட்டுமின்றிபுறநகரிலும் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துஉள்ளது. தினமும் 8 பேர் பாதிக்கப்படுகின்றனர்.வழக்கம் போல் வடகிழக்கு பருவமழையோடு டெங்கு சீசனும் துவங்கியது. அக்., முதலில் படிப்படியாக பாதிப்பு தீவிரமடைந்து இப்போது உச்சக்கட்டத்தை தொட்டுஉள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் டெங்கு பாதிப்புள்ளது.பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அக்.,ல் 56 ஆக இருந்தது. பின் மூன்று மடங்கு அதிகரித்து நவ.,ல் 160ஐ தொட்டது. தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. டிச., முதல் இரு நாளில் மட்டும் 16 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அக்.,ல் தினமும் சராசரியாக இருவரும், நவ.,ல் 4 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில், இம்மாதத்தில் தினமும் 8 ஆக அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரியாராஜ் கூறியதாவது:பிற மாவட்டங்களை விட மதுரையில் பாதிப்பு கட்டுக்குள் தான் உள்ளது. டெங்கு பாதிப்பு உள்ள பகுதியில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 26 நடமாடும், 13 நிலையான மருத்துவக்குழுக்கள்அமைத்துள்ளோம். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது பாதிப்பு மிகக்குறைவு. அச்சப்படும் அளவில் டெங்கு பாதிப்பு இல்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X