மாவட்ட வாலிபால் போட்டி: தர்மசாஸ்தா பள்ளி வெற்றி

Added : டிச 04, 2019
Advertisement

கோவை:மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில், மத்வராயபுரம் பள்ளி அணியும், தர்மசாஸ்தா பள்ளி அணியும் வெற்றி பெற்றன.ஈச்சனாரி, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியின் சார்பில், ரத்தினம் டிராபிக்கான மாவட்ட அளவில் வாலிபால் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 25 அணிகள் பங்கேற்றன.போட்டியை கல்லுாரி நிர்வாக அதிகாரி மாணிக்கம், முதல்வர் முரளிதரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டி ஒருங்கிணைப்பாளராக கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் பிச்சைக்கனி மற்றும் சரவணன் செயல்பட்டனர்.நேற்று நடந்த முதல் போட்டியில், கெங்குசாமி நாயுடு பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், விஸ்வேஸ்வரா பள்ளி அணியையும்; 2வது போட்டியில், மதுக்கரை அரசு பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், ரங்கநாதர் பள்ளி அணியையும் வென்றன. 3வது மத்வராயபுரம் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், சி.எம்.எஸ்., பள்ளி அணியையும்; 4வது போட்டியில் தர்மசாஸ்தா பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், வெள்ளக்கிணறு வி.சி.வி., பள்ளி அணியையும் வென்றன.5வது போட்டியில், அகர்வால் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், போத்தனுார் மியூஸ் பள்ளி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X