பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : டிச 04, 2019
Advertisement

சாலையில் விழுந்த பணம் ஒப்படைப்பு

மதுரை: ஐராவதநல்லுார் வெண்கலக்கடைத்தெருவில் மாவு வியாபாரம் செய்பவர் சக்ரவர்த்தி, 43. இவர் கடந்த நவ.,29 இரவு கட்டை பையில் வைத்திருந்த ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்தை தவற விட்டார். சக்ரவர்த்தி தவற விட்ட பணத்தை பழைய குயவர்பாளையம் அந்தோணி மூப்பனார் தெருவை சேர்ந்த பூபாலன் 42, கண்டெடுத்து கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் ஒப்படைத்தார்.

தீப்பிடித்து எரிந்த லாரி
மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து லாரியில் கழிவு பொருட்களை ஏற்றி கொண்டு மதுரை தெப்பக்குளத்திற்கு நேற்று மாலை டிரைவர் மொக்கப்பாண்டி வந்து கொண்டிருந்தார். கட்டபொம்மன் சிலை அருகே லாரியின் பிரேக் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிடித்தது. சுதாரித்து கொண்ட டிரைவர் லாரியை ஓரம் கட்டி தீயணைப்பு குழுவிற்கு தகவல் கொடுத்தார். திடீர்நகர் தீ தடுப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் குழுவினர் லாரியில் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X