கோவை பி.எப்., அலுவலக வீரர்கள் முதலிடம்: தேசிய தடகள போட்டியில் 'தகர்த்தனர்'

Added : டிச 04, 2019
Advertisement

கோவை:தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில், கோவையை சேர்ந்த பி.எப்., ஊழியர்கள் வெற்றிகளை குவித்துள்ளனர்.அசாம் மாநிலம் பி.எப்., அலுவலகம் சார்பில், தேசிய அளவில் பி.எப்., ஊழியர்களுக்கான கால்பந்து போட்டி, கவுகாத்தி சாய் ஸ்டேடியத்தில், கடந்த வாரம் நடந்தது. ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.கிழக்கு மண்டலத்தில் கோல்கட்டா அணியும், மேற்கு மண்டலத்தில் குஜராத் அணியும், தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு அணியும், வடக்கு மண்டலத்தில் டில்லி அணியும், மத்திய மண்டலத்தில் ஹரியானா அணியும் பங்கேற்றன.தமிழக கால்பந்து அணியில், கோவையிலிருந்து விஜயகுமார் தேர்வாகினார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி முதலிடத்தையும்; கோல்கட்டா அணி இரண்டாமிடத்தையும் பிடித்தது.பி.எப்., ஊழியர்களுக்கான தடகளம், டேபிள் டென்னிஸ், செஸ், இறகுப்பந்து போன்ற பல்வேறு போட்டிகள், சண்டீ கரில் நடந்தன. இறகுப்பந்து இரட்டையருக்கான இறுதிப்போட்டியில், கோவையை சேர்ந்த ஷானவாஸ், சென்னையை சேர்ந்த இமானுவேல், ஆகியோர் முதலிடம் பிடித்தனர். மஹாராஷ்ரா அணி இரண்டாமிடத்தை பிடித்தது.பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில், சிவஞான வள்ளி மூன்றாமிடம்; 200மீ., மற்றும் நீளம்தாண்டுதலில் இரண்டாமிடம்; வட்டுஎறிதலில் மூன்றாமிடம் பிடித்தார்.மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர்-1 ஜய்வதன் இங்லே, வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X